ஒரு மனிதனின் உடலிலுள்ள உறுப்புகள் எல்லாம் நாக்குகளாக மாறினாலும்,
மரியன்னையை அவருடைய
தகைமைக்கு ஏற்றவாறு புகழ முடியாது. (புனித அகுஸ்தினார்.)
"மாதாவே துணை நீரே! உம்மை" என்ற பாடல் வரிகளை சற்று தியானித்து
பாருங்கள். இந்த பாடலில் உள்ள இறுதி பத்தியில் பின்வருமாறு வருகிறது.
"ஒன்றே கேட்டிடுவோம் தாயே! நாம், ஓர் சாவான பவந்தானும்,
என்றேனுஞ் செய்திடாமற்
காத்து எம்மைச் சுத்தர்களாய்ப் பேணும்"
இவ்வாறு நாம் பாட தேவையில்லை. இதை படித்ததும் அதிர்ச்சி ஆக வேண்டாம்
என் அன்பர்ந்தவர்களே!
நாம் தினமும் ஜெபமாலை சொல்லும் போது இந்த பாடலில் வருவது போல
நாம் கேட்காமலே அவரே தானாக வந்து, நம்மை பாவம் செய்ய விடாமல் சுத்தர்களாய் பார்த்து கொள்வார்.
இதைத்தான் சொல்லவந்தேன்.
இது உண்மைதான், நீங்கள் ஜெபமாலை தினமும் சொல்லும்போது மாதா
உங்களை ஒரு போதும் பாவம் செய்ய அனுமதிக்க மாட்டார். சாத்தான் உங்களை தொடர்ந்து அவன் வலையில் விழ வைக்க போரிடுவான்.
அப்போது உங்களை காப்பாற்றும் ஆயுதம் ஜெபமாலை.
நீங்கள் ஜெபமாலை சொல்லும்போது, சாத்தானின் தலைவனாகிய
அலகையையும், அவனது மாய கவர்ச்சியையும் நீங்கள் எளிதில் வெல்ல முடியும். இதுவெல்லாம்
பல கோடி கிறிஸ்தவ மக்களின் அனுபவம். இது பொய்யல்ல நிஜம்.
கிபி 431 ல் கூட்டபட்ட எபேசு திருச்சங்கம், கிறிஸ்து உண்மையான
இறைவன், உண்மையான மனிதன் என்ற திருச்சபையின் போதனை உண்மை என்றால், அன்னை மரியா இறைவனின்
தாய் என்பதும் உண்மையானதே என்று பிரகடனபடுத்தியது.
இதற்கு அவர்கள் கூறிய கிரேக்க சொல் "தியோடோக்கோஸ்" என்பதாகும். "தியோஸ்" என்றால் இறைவன் என்றும் "டோக்கோஸ்" என்றால் ஈன்றெடுத்தவர் என்றும் பொறுள்படும்.
ஆகவே மரியா இறைவனை ஈன்றெடுத்தவர் என்று அறிவிக்கப்பட்டார்.
அருள் நிறைந்த மரியே வாழ்க!
இறைவனின் தாயே வாழ்க!
Comments
Post a Comment