நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்



படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.... 

கண்கள் அழகாக இருக்க வேண்டுமா?
சுற்றியுள்ளோரின் நல்லவற்றை மட்டுமே
காணப் பழகுங்கள்.

முகம் பொலிவாக இருக்க வேண்டுமா?
புன்னகையோடு மனிதர்களுக்கு தினமும்
முகமன் கூறிப் பாருங்கள்.

மெல்லிய உடல் வேண்டுமா?
உங்களது உணவை, பசித்த ஏழைகளுடன்
பகிர்ந்துண்டு பாருங்கள்.

உடை அலங்காரம் பெற வேண்டுமா?
அரை நிர்வாணிகளுக்கும் உடை உடுத்த
உதவி செய்து பாருங்கள்.

அழகான கூந்தல் வேண்டுமா?
அனாதைக் குழந்தைகளின் தலையை
இரக்கமுடன் தடவிப் பாருங்கள்.

கைகள் அழகு பெற வேண்டுமா?
இல்லாத எளிய மக்களுக்கு ஈந்துதவி
செய்து பாருங்கள்.

கால்கள் உறுதி பெற வேண்டுமா?
அன்றாடம் நடந்து பழகிப் பாருங்கள்.

வெறும் ஒப்பனைகளால் உங்கள் முகம் மட்டுமே அழகு பெறும். ஆனால், இவற்றைக் கடை பிடித்துப் பாருங்கள். உங்கள் அகமும் அழகு பெறும்.

 படைத்த இறைவன் நமக்கு இரண்டு கைகளை வழங்கியுள்ளான். அதில் ஒன்று, நமக்கு. இன்னொன்று, இன்னொருவருக்கு உதவுவதற்கு என்பதை மறந்து விட வேண்டாம்.

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் வாழ இறைவன் அருள் புரியட்டும்…!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
 நல்ல எண்ணங்களுடன்  நமது வாழ்வை தொடங்குவோம்.
செபங்களுடன்... 
பணி. நிக்கோலாஸ் மாசிடோன் கா.ச

Comments

  1. Congratulations dear fr.Macefonfor your inspirational quotes.i do expect more.May the almighty God.bless you abundantly. 💯

    ReplyDelete

Post a Comment