வாழ்க்கையில் புரிதல் இல்லாதவர்களுடன் பயணிக்க நேரிட்டால், உனக்குத் தேவைப்படும் முதல் ஆயுதம் மெளனம் மட்டுமே. அறிவுரை சொல்லத் தெரிந்தவர்களுக்கு, அதில் உள்ள வலியை எப்போதும் உணர முடியாது.
துக்கமோ, இன்பமோ அதை எல்லாம் அவரவர் மட்டும் தான் அனுபவிக்க முடியும். போகிறாயா, சரி போ. இருக்கியா, சரி தாராளமாக இரு.. இப்படி ஒரு மனநிலை, வாழ்க்கைய வாழ்ந்து விட்டு சந்தோசமா இருக்கணும். யாரையும் எதையும் எதற்காகவும் சார்ந்து இருக்கக் கூடாது.
அவன் *அப்படிப்பட்டவன்*, இவன் *இப்படிப்பட்டவன்* என்று அடுத்தவனைப் பற்றி கு(நி)றை பேசும் நாம், நாம் எப்படிப்பட்டவன் என்று கூற மறுத்து விடுகிறோம். இது எங்கே போய் முடியுமோ தெரியலே என்று சொல்லப்படுவதில் சில நேரங்களில் அக்கறை உண்டு. சில நேரங்களில் அறியாமை உண்டு. பல நேரங்களில் பொறாமை உண்டு.
மனது உள்ளே அழுவதினால் அதன் சத்தம் வெளியே கேட்பதில்லை. முகத்தில் நன்றாய் சிரித்துக் கொள்வதினால், சோகம் யாருக்கும் தெரிவதில்லை.
விட்டுக் கொடுத்தே வாழ்வதினால், அடிமைப்படுத்துபவர்களுக்கு எதுவும் புரிவதில்லை. கூட இருந்தே ஏமாற்றப்படுவதினால், வைத்த நம்பிக்கைக்கு அர்த்தம் தெரிவதில்லை. நெஞ்சினுள்ளே துரோகத்தையும் வைத்திருப்பதினால், உண்மையான அன்பை உணர முடிவதில்லை. வீண் பழிகளை ஏற்கத் தொடங்கினால், மேலும் துயர் வந்து சேரத் தவறுவதில்லை. எல்லா வலிகளையும் தாங்கத் துணிந்து விட்டால், சந்தோசமாக இருப்பதாக நடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
அடுத்த நொடி என்ற அதிசயத்தில் ஒளித்து வைத்திருப்பதில் எதுவும் இருக்கலாம். அதனால் கோபம், போட்டி, பொறாமை, தற்பெருமை, ஆணவம், அகங்காரம், சூழ்ச்சி இது போன்ற குப்பைகள் இன்றி வாழ்வோம். நீங்கள் ஒரு சில விசயங்களுக்காக ஒதுக்கும் நேரங்கள், உங்களது குணத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி.
ஒரு விதை சத்தமில்லாமல் வளரும். ஆனால் ஒரு மரம் பெரிய சத்தத்துடன் விழுகிறது. அழிவுக்கு இரைச்சல் உண்டு. ஆனால் படைப்பு அமைதியானது. இது தான் மெளனத்தின் சக்தி. அமைதியாக வளருங்கள். உங்களைப் பற்றி நீங்களே பெருமையாக எழுதிக்
கொள்ளாதீர்கள். பழகியவர்களுக்குத் தெரியும் அதில் எத்தனை பொய் இருக்கிறதென்று.
Dear Father Nicholas nice to read your blog. Keep it up. Peter Ignatius sj
ReplyDelete