மகிழ்ச்சியான வாழ்க்கை
ஒரு பொருள் மீது ஆசைப்படுகிறோம்.
அதற்காகத் துன்பப்பட்டு அந்தப் பொருளை அடைகிறோம்.
அடைந்த பின்பு ஆசை விலகிவிடுகிறதா?
இல்லையே?
ஆசை மீண்டும் மறுபொருளுக்குத்தாவி
தொடர்ந்து கொண்டேதானே இருக்கிறது.
இப்படி மாறி மாறி ஆசைப்படுவதால்
மனித வாழ்க்கை ஆசையின் பின்னாலேயே ஓடிக்கொண்டிருக்கிறது.
தேவையைக் குறைத்துக் கொள்பவனுக்கு
மோகத்தினால் ஏற்படும் துன்பமில்லை.
தேவையைக் குறைத்துக் கொள்ளும் மனநிலையை
அடைய பக்குவம் தேவை.
மற்றவர்கள் வாழ்க்கையை நாம் வாழ முடியாது.
நம் வாழ்க்கை வேறு.
அவர்கள் வாழ்க்கை வேறு என்று வித்தியாசம்
முதலில் உணர்ந்து கொள்பவன்
ஆசைகளின் பின்னால் ஓடுவதில்லை.
மற்றவர்களின் பொய்ப் பகட்டு
அவனை பாதிப்படையச் செய்வதில்லை.
மற்றவர்களுக்காக வாகனம் எடுப்பவன்.
மற்றவர்களுக்காக வீடு கட்டுபவன்
மற்றவர்களுக்காக… … … … … … …
மற்றவர்களுக்காகத் தான் வாழ்ந்து மடிகின்றான்.
ஒருநாளும் அவன் தனக்காக வாழ்வதில்லை.
எவனொருவன் ஒரு நொடியேனும் தனக்காக வாழத்துவங்குகிறானோ
அன்று காத்திருக்கிறது துன்பமில்லா பெருமகிழ்ச்சி வாழ்வு.
It's really 💯ture
ReplyDeleteExactly 💯
ReplyDelete