ஒழுக்கத்தோடு வாழ்பவனுக்குப் பெயர்தான்... ... ...


          மனிதனை வளர்ப்பது ஒழுக்கம். மனிதனை உயர்த்துவது ஒழுக்கம். நம்மை நல்வழிகளில் நெறிப்படுத்தி, மேன்மையோடு கூடிய வாழ்வில் தழைக்கச் செய்யும் பண்பே ஒழுக்கம்தான். வாழ்வில் ஒழுங்கைக் கடைப்பிடித்து வாழ்வதே நாம் தலை சிறந்து வாழ வழி வகுக்கும்...

     ஒழுங்கு என்பது சாட்சிகள் இல்லாத இடத்திலும் தவறிழைக்காமல் நேர்மையாக நடப்பதாகும். ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உயர்த்தி, கல்விக்கு இரண்டாம் இடம் தந்து ஒழுக்கத்திற்கு முதல் இடம் தந்தார் திருவள்ளுவர்...

               வெள்ளை காகிதத்தில் சிறு கரும்புள்ளி இருந்தால், கரும்புள்ளி மட்டுமே கண்ணில் படும். எத்துனை பெருமைகள், திறமைகள் இருந்தாலும் ஒழுக்கம் இல்லையென்றால் மதிப்பதில்லை. விலங்குகள் கூட ஒழுக்கத்தோடு வாழும்போது விவேகமான மனிதன் ஒழுக்கம் தவறலாமா…?

ஆம் நண்பர்களே...!

ஆறறிவு பெற்ற மனிதனுக்கு இன்று அவசியம் தேவை நல்லொழுக்கம்...!

ஒழுக்கத்தோடு வாழ்பவனுக்குப் பெயர்தான் மனிதன்.
ஒழுக்கம் தவறி வாழ்பவன் மனிதனா?

'ஒழுக்கம்’ என்னும் கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.
ஒழுக்கமே உங்கள் உயர்வுக்கு வழி வகுக்கும்.
ஒழுக்கம் இல்லாத வாழ்வினிலே என்றும் உயர்வுக்கு இடமே இருக்காது,
அது இலக்கு இல்லாத பாதையாகும், துடுப்பு இல்லாத தோணியாகும்…!!!

Comments